தமிழ்நாடு

ஓய்வு பெற்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்

ஓய்வு பெற்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்

Rasus

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் சென்னையில் காலமானார்.

நெல்லை மாவட்டம் திருப்புடை மருதூர் கிராமத்தில் பிறந்தவர் ரத்னவேல் பாண்டியன். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

1988ஆம் ஆண்டு முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ள இவர், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். மண்டல் கமிஷன் தொடர்பான வழக்கு உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ள இவர், நேர்மையான நீதிபதி என்றும் பெயர்பெற்றவர். ரத்தினவேல் பாண்டியனின் மகன் சுப்பையா உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது இருந்து வருகிறார்.