தமிழ்நாடு

ரிசல்ட் அறிவிப்பில் மட்டும் மாற்றம் போதுமா? ஸ்டாலின் கேள்வி

ரிசல்ட் அறிவிப்பில் மட்டும் மாற்றம் போதுமா? ஸ்டாலின் கேள்வி

webteam

பொதுத்தேர்வு முடிவுகள் அறிவுக்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதால் கல்வித் தரத்தை உயர்த்த முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்ன‌யில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து கல்வி தரத்தை உயர்த்த முயற்சி எடுத்தால் ப‌ராட்டுக்குறியது. அதை விடுத்து பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவதால் கல்வித் தரத்தை உயர்த்த முடியாது என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பொதுத்தேர்வு முடிவுகள் ரேங்க் அடிப்படையில் வெளியிடப்படாது என கல்வித்துறை அமைச்சர் செல்ங்கோட்டையன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.