நாகை, கடலூரை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்தது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள 48 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் அரசிதழிலும் அந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையால் சம்பந்தப்பட்ட 48 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சேபணை தெரிவிக்க முடியவில்லை என்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.