தமிழ்நாடு

வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்பு வழங்க வேண்டி தீர்மானம்

வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்பு வழங்க வேண்டி தீர்மானம்

Veeramani

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோவுக்கு, கட்சியின் துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தன் மகன் அரசியலுக்கு வருவதில், விருப்பம் இல்லை என்றாலும், வரும் 20ஆம் தேதி நடைபெறும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவே இறுதியானது என வைகோ கூறியிருந்தார். இந்த நிலையில் சொந்த மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதனால், மதிமுக துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வைகோவின் மகனுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.