தமிழ்நாடு

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

கலிலுல்லா


மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மேற்குவங்காளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.