தமிழ்நாடு

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்: ஸ்டாலின் முன் மொழிந்தார்

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்: ஸ்டாலின் முன் மொழிந்தார்

Rasus

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை செயலகத்தில் கடந்த 9-ஆம் தேதி கடிதம் அளித்தார். இதற்கான தீர்மானத்தை இன்றைய அவை நிகழ்வில் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரும் இந்தத் தீர்மானம், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். திமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 35-க்கும் அதிகமாக இருப்பதால், இந்த தீர்மானத்தை அவையில் விவாதிக்க ஆதரவு கிடைத்துவிடும். அதன்பின் எப்போது வாக்கெடுப்பு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

வாக்கெடுப்பு நடந்தால், அப்போது சபாநாயகர் தனபால் அவையில் இருக்கமாட்டார். வாக்கெடுப்பில், பொதுவாக குரல் வாக்கெடுப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும். திமுக வற்புறுத்தினால், எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது. இதனிடையே காங்கிரஸ் கொறடா விஜயதரணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.