தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மதிமுக எதிர்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மதிமுக எதிர்ப்பு

webteam

பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பாழ்படுத்தக் கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை அருகே சிங்காநல்லூரில் மதிமுக பொதுக்குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும், சீமைக்கருவை மரங்களை அகற்றும் பணியில் இளைஞர்கள் களமிறங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.