தமிழ்நாடு

"கோயில் நிலங்களில் கீற்றுக்கொட்டகையில் வசிப்போர் வெளியேற்றப்படவில்லை" – அமைச்சர் சேகர்பாபு

"கோயில் நிலங்களில் கீற்றுக்கொட்டகையில் வசிப்போர் வெளியேற்றப்படவில்லை" – அமைச்சர் சேகர்பாபு

Veeramani

கோயில் நிலங்களில் கீற்றுக் கொட்டகையில் குடியிருப்பவர்கள் ஒருவர் கூட அப்புறப்படுத்தப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து, கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்றக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில் நிலங்களில் வசிப்போர் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இவர்களில் 248 பேர் மயிலாப்பூரில் உள் கோயில் வாடகைதாரர்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். கோயில் நிலங்களில் குடியேறியவர்களை உள் வாடகைதாரர்களாக தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்வாக அமைச்சர் கூறினார். இதுவரை 187 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக சேகர்பாபு தெரிவித்தார்.