சென்னை தியாகராய நகர் வெங்கட்ராமன் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் அங்கு வசிப்போர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
முதியவர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், நீர் தேங்கியிருப்பதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களைக் கூட வெளியில் வந்து வாங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மழைநீர் தேங்கியிருப்பது குறித்து உதவி எண்கள் மூலம் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் வெங்கட்ராமன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.