தமிழ்நாடு

வேகமாக தயாராகும் இரண்டாவது ரிக் இயந்திரம் 

webteam

அதிநவீன இரண்டாவது ரிக் இயந்திரத்தை பொருத்தும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 52 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தோய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் இரண்டாவது அதிநவீன இயந்திரத்தின் உபகரணங்களை பொருத்தும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது இயந்திரத்தை சரியாக பொருத்திய பிறகு துளையிட ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீட்புப் படையினர் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.