தமிழ்நாடு

ரிசர்வ் வங்கியில் குடியரசு தினவிழா

ரிசர்வ் வங்கியில் குடியரசு தினவிழா

Rasus

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தலைமை பொது மேலாளர் பொறுப்பிலிருக்கும் அருந்ததி மெஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்பாக, பெண்காவலர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றிய ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. பின்னர் பேசிய அருந்ததி மெஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சவாலாக அமைந்தது என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு தொடர்பாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.