கனமழை web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை.. 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..

Rishan Vengai

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை, மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை..

சென்னையில் மழை!

சென்னையில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.