தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தியாளர் ஆக வாய்ப்பு !

புதிய தலைமுறை செய்தியாளர் ஆக வாய்ப்பு !

webteam

ஊடகத்துறையில் பணிபுரிந்து சேவை செய்ய விரும்புவோருக்கு புதிய தலைமுறை பத்திரிகையில் ஒரு வாய்ப்பு.

புதிய தலைமுறையில் செய்தியாளராக பணியாற்ற மாணவர்களுக்கு புதிய தலைமுறை பத்திரிகை சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பத்திரிகையாளர் திட்டம் 2018 - 19 என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்தப் பயிற்சி திட்டத்தில், 2018-19 ஆண்டில் கல்லூரிகள் படிக்கும் மாணவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அஞ்சல் வழிக் கல்வி பயில்பவர்கள் பங்கேற்க இயலாது. பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்திசெய்து, உரிய சான்றுகளோடு ஜூலை 20, 2018ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பத்துடன் நீங்கள் இணைத்து அனுப்ப வேண்டியவை :

உங்கள் படைப்பாற்றலுக்கு சான்றாக சமகால அரசியல், சமூகம், சினிமா மற்றும் கலை / இலக்கியம் தொடர்பான கட்டுரை ஒன்றை கச்சிதமான வார்த்தைகளில் மூன்று பக்கங்கள் மிகாமல் எழுதவும்.

புகைப்படத்துறையில் பயிற்சி பெற விரும்புகிறவர்கள் கட்டுரைக்குப் பதிலாக, இரண்டு புகைப்படங்களை அனுப்பவும். பார்த்ததுமே அசர ஒரு செய்தியை சொல்கிற புகைக்கப்படங்களாக அவை இருக்க வேண்டும்.

நிருபர் + புகைப்படக்காரர் துறைக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டுரையும், புகைப்படமும் சேர்த்து அனுப்புவது அவசியம். 

இதற்கான விண்ணப்படிவம் தற்போது விற்பனையாகும் புதிய தலைமுறை வார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அனுப்ப வேண்டிய தபால் முகவரி மற்றும் குறிப்புகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.