மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடிக்க வேண்டுமென கூறியுள்ள மின்வாரிய அதிகாரிகள், அதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதால், கட்டண உயர்வு இருக்காது என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.