தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுங்க: சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுங்க: சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

kaleelrahman

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்மழை காரணமாக வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. கச்சேரி சாலை அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காவல் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதே போன்று, வாணியம்பாடி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மருத்துவமனை முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் உத்தரவின் பேரில், ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.