தமிழ்நாடு

தமிழ்நாடு: தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இன்று முதல் விநியோகம்!

தமிழ்நாடு: தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இன்று முதல் விநியோகம்!

JustinDurai

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் இன்று தொடங்குகிறது. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அப்போது மக்கள் ஒரே இடத்தில் கூடி தனிமனித இடைவெளி கேள்விக்குறியானதால் தனியார் மருத்துவமனைகளிலேயே மருந்தினை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் விற்பனை நேற்று நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று முதல் இணையத்தில் பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில், இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. https://tnmsc.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை விவரம், நோயாளியின் விவரம், தொற்று அறிகுறி , இணை நோய் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.