தமிழ்நாடு

அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

webteam

சென்னையில் குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் பிரேத பரிசோதனை இன்று காலை நிறைவுபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள அஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அழகேசனின் உறவினர்கள் இங்கு வர வேண்டும். அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றனர். மதுரவாயல் காவல்துறையினர் இதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் அழகேசனும், கொல்லப்பட்ட அஸ்வினியும் காதலித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கருத்து‌ வேறுபாடுகளால் அஸ்வினி பிரிய முடிவெடுத்தபோது, அழகேசன் அவரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அஸ்வினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் அழகேசனை எச்சரித்து அனுப்பியுள்ளார்.