பழனி அருகே அத்திமரத்துவலசில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி சார்பாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. 200 மற்றும் 300 மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் சேலம், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி பகுதிகளில் இருந்து 300 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
காளைகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காண அப்பகுதி மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். வெற்றி பெற்ற காளையின் சொந்தக்காரருக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.