தமிழ்நாடு

உயர் மேடைகள் தேவையில்லை; சரிசமமாக பணியை மேற்கொள்க: பதிவு அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு

உயர் மேடைகள் தேவையில்லை; சரிசமமாக பணியை மேற்கொள்க: பதிவு அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு

webteam

இனி வரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல், மக்களுடன் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினைச் செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கட்டணம் யாவும் இணைய வழியில் செலுத்தப்படுவதால், சார்பதிவாளர் பணத்தை கையாள வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உயர் மேடைகள் தற்போது தேவை இல்லை என்பதால், பதிவு அலுவலர்களின் இருக்கையை சம தளத்தில் அமைத்து, சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.