தமிழ்நாடு

“பெட்ரோல் விலை குறைப்பு என்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்” - கார்த்தி சிதம்பரம்

“பெட்ரோல் விலை குறைப்பு என்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்” - கார்த்தி சிதம்பரம்

kaleelrahman

தற்போதைய தமிழக ஆளுநர் பாஜகவுக்கு ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் “திமுக அரசு எந்த திசையை நோக்கி செல்லவிருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. தமிழக பாஜக தலைவர் முருகன் எந்த யாத்திரை போனாலும் தமிழகத்தில் தாமரை மலராது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றும் விதமாக பெட்ரோல் விலையை குறைத்திருப்பது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கை.

பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைத்திருக்கும் செய்தி நாடு முழுவதும் சென்றடைந்து மற்ற மாநில அரசுகளுக்கு இது ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர் நிதியை மத்திய அரசு நிறுத்தி இருந்த போதிலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதியை தமிழக அரசு கூட்டியுள்ளது பாராட்டத்தக்கது” என்று கூறினார்.