தமிழ்நாடு

ரூ.1கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்: சீனா வியாபாரி உட்பட 5‌ பேர் கைது

ரூ.1கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்: சீனா வியாபாரி உட்பட 5‌ பேர் கைது

webteam

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனா வியாபாரி மற்றும்‌ சென்னை இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பதி போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே குடோனை சோதனை செய்து 15 கிலோ எடையுள்ள ரூ.4கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசா‌ரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த நாகூர்மீரான்மற்றும் சீனாவை சேர்ந்த லின்வின்புன் மூலமாக சர்வதேச கடத்தல்காரர்களுக்கு செம்மரங்களை ஏற்றுமதி செய்து வருவது தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று காலை ரேணிகுண்டா மண்டலம் அஞ்சிமேடு பகுதியில் செம்மரங்களை காரில் கடத்தி வந்த நாகூர்மிரான் மற்றும் சினாவை சேர்ந்த லின்வின்புன்னை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ80 லட்சம் மதிப்புள்ள 1.5 டன் எடையுள்ள செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆபரண கற்கள்‌ வியாபாரம் என்ற பெயரில் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பதி எஸ்‌.பி.அபிஷேக் மகந்தி தெரிவித்தார்.