வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலம் புயலாக மாறி, அதிதீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. 31 மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரையில் ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கும் நிலையில், அக்டோபர் 26ஆம் தேதியான அர்னாப் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 26ஆம் தேதி உருவாகும் புயல் மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறும் எனவும், 28ஆம் தேதி காலை, விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் தான் இன்று தமிழகத்தின் 3 மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரையில் அதிகனமழை பெய்யும் என ரெட் அலெர்ட்டுக்கான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பரவலாக மழைபெய்துவரும் நிலையில், இன்று காலை 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.