நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வேலூர் கிருஷ்ணகிரி திண்டுக்கல் திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.