தங்கத்தின் விலை முகநூல்
தமிழ்நாடு

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ஜெட் வேகத்தில் எகிறும் தங்கத்தின் விலை.. என்ன காரணம்?

இது குறித்த தகவலை காணலாம்.

திவ்யா தங்கராஜ்

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.66,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.8,360-க்கு விற்பனையாகிறது.

சாதாரண மக்கள் தொடங்கி செல்வந்தர்கள் வரை அனைவரின் சேமிப்பு பொருளாகவும்,  பாரம்பரிய முதலீட்டு தீர்வாகவும் தங்கம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்றாவது ஒரு நாள் தங்கம் விலை சற்றே குறைந்தாலும் மீண்டும் ஓரிரு நாளில் ஏறுமுகத்தை காட்டிவிடும். இதனால் நகை பிரியர்கள் சற்றே கவலையும் அடைவர். பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி ( மார்ச் 28 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,340-க்கும், சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை நெருங்கி இருக்கிறது. சென்னையில் இன்று (மார்ச் 29 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,360-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காரணங்கள்!

சர்வதேச சந்தை விலைகள், நாணய மாற்று விகிதங்கள், பொருளாதார குறியீடுகள், புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் விநியோகம் - சேவை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்க விலைகள் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகின்றன.

பணவீக்கம்

அதிகரிக்கும் போது, தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிக்கிறது, இதனால் தங்கத்தின் விலை உயர்கிறது. 

இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, உற்பத்தி வரி:

இந்தியாவில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, உற்பத்தி வரி போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கின்றன.