summer
summer pixabay
தமிழ்நாடு

சென்னையில் திடீரென அதிகரித்த வெப்பம்!’ - என்ன காரணம்?

Seyon Ganesh

சென்னையில் காலை நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தால் மாலை நேரங்களில் அனலின் அளவு அதற்கும் மேலாக உள்ளது , மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

heat wave

தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கி நடந்து வரும் இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே சென்னையில் வெயில் மற்றும் அனலின் உஷ்ணம் தாங்கமுடியாத அளவில் உள்ளது. ' ஃபேன 12ம் நம்பர்ல வெய்யேன்' என கதறும் நிலையில் தான் வெயிலின் தாக்கம் இருக்கிறது. அதிலும் மதிய வேளைகளில் வெளியே சென்றால், பாலைவனத்தைக் கடப்பது போல் அனல்காற்று முகத்தில் அடிக்கிறது. காலை நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தால் மாலை நேரங்களில் அனலின் அளவு அதற்கும் மேலாக உள்ளது. சென்னைவாசிகள் பலரும் வெளியில் தலைகாட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதற்குமத்தியில் உணவு டெலிவரி செய்பவர்கள், வெளியில் சென்று வேலை செய்பவர்கள், சாலைகளில் பணிபுரிபவர்கள், ஓட்டுநர்களின் நிலை சொல்லவே முடியாத அளவு மிகவும் பரிதாபமாக உள்ளது.

இந்த வருடத்தில் முதல்முறையாகக் கடந்த திங்கள் கிழமை சென்னையில் வெளியில் அளவு 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த இரு நாள்களாகத்தான் வெயிலின்அளவு மிக அதிகமாக உள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெயிலின் அளவு 40.8 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளது. இது சென்னையின் வருடாந்திர அக்னி வெயிலின் அளவைவிட 3-4 டிகிரி அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

திடீரென இவ்வளவு வெயில் அதிகரித்ததுக்குக் காரணம் மோக்கா புயல் என்கிறார்கள். வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வடதிசையில் நகர்ந்து சென்றபோது தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிட்டது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்குதிசையில் இருந்து வறண்டக் காற்று வீசுவதால் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது. வறண்டகாற்றால் ஏற்படும் வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியமான சூழல் உருவாகியுள்ளது. இன்னும்இரண்டு, மூன்று நாள்களுக்கும் இதே நிலை தொடரும் என வானிலை ஆய்வு மைய தரப்பில் இருந்துதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெயிலில் வீடுகளில் இருப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது, சீலிங் ஃபேனும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கவில்லை என சென்னை மக்கள் கூறியுள்ளனர். வெயிலின் தாக்கம் பற்றி கூறியுள்ள இந்திய வானிலை மையத்தைச் சேர்ந்த சென்னை அதிகாரி செந்தாமரை கண்ணன், “சென்னையில் திடீரென வெப்பம் அதிகரிக்கப் பல காரணங்கள் உள்ளன ஆனால் அதில் முக்கியமாக மோக்கா புயல் நகர்ந்து செல்லும்போது அதனால் உருவான வறண்ட வனிலை மற்றும் காற்றில் ஈரபதம் இல்லாததே ஆகும். கடந்தசெவ்வாய் கிழமை அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 2020, மே 20-ம் தேதி இதே போல் அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம்நிலவியது. அதற்குப் பிறகு தற்போது தான் 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.