தமிழ்நாடு

''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

webteam

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பற்றி அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவித்தார். 

இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். மேலும் தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர். 

இந்நிலையில் இன்று தேனியில் அமமுக தொண்டர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்  அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. தங்கதமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம், ஆனால் நடக்கவில்லை, தற்போது நடந்துவிட்டது. என தெரிவித்தார்