ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம்; ஜெயலலிதா மரணமடைந்தபோது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நினைத்திருந்தால் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பின் அடிப்படையில் நீதி விசாரணை குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.