சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் நேற்று 447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9674 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக கோடம்பாக்கத்தில் 895 பேரும், திருவிக நகரில் 699 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.