காரா எனும் பதிப்பகத்தை தொடங்கிய ரவிச்சந்திரன்
காரா எனும் பதிப்பகத்தை தொடங்கிய ரவிச்சந்திரன் pt web
தமிழ்நாடு

மதுரை: ’காரா’ எனும் பெயரில் பதிப்பகம், புத்தக நிலையத்தை தொடங்கினார் ரவிச்சந்திரன்!

PT WEB

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து விடுதலையான ரவிச்சந்திரன், காரா எனும் பெயரில் பதிப்பகம் மற்றுக் புத்தக நிலையத்தை மதுரையில் தொடங்கியுள்ளார்.

புத்தக வாசிப்பை எப்போதும் மேற்கொண்டிருந்த ரவிச்சந்திரன் சிறையில் தனக்கு துணையாக இருந்தது புத்தகங்கள் தான் என்றும், புத்தகங்கள் இல்லையெனில் நான் இல்லை என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை தொடர்பாக கொடுக்கப்பட்ட தீர்ப்பில், “பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம் சிறையில் அவரது நன்னடத்தை பரோலின் பொழுது அவரது நன்னடத்தை அவரது மருத்துவ பதிவிகளில் இருந்து அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய் அவர் பெற்ற கல்வித் தகுதிகள் மற்றும் அவரது மனு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக் கூடிய விஷயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவரை உச்ச நீதிமன்றம் விடுவிக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நளினி உள்ளிட்ட ஆறு பேர் தாக்கல்செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 பேரையும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மதுரை சிறையில் இருந்து, அப்போது பரோலில் இருந்த ரவிச்சந்திரனும் விடுதலை ஆனார்.