தமிழ்நாடு

பரோலில் நாளை வெளிவருகிறார் ரவிச்சந்திரன் - சிறைத்துறை தகவல்

பரோலில் நாளை வெளிவருகிறார் ரவிச்சந்திரன் - சிறைத்துறை தகவல்

கலிலுல்லா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிசந்திரன் இன்று பரோலில் வெளிவர இருந்த நிலையில் நாளை வெளிவருவார் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை அல்லது மாலையில் ரவிச்சந்திரன் வெளியே வருவார் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில், கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட முதல்வர் மதுரையில் இருந்து தரை வழிப் பயணமாக கன்னியாகுமாரி செல்ல உள்ளார். இதன் காரணமாக சில பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை ரவிச்சந்திரன் பரோலில் விடுவிக்கப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.