தமிழ்நாடு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா விவகாரம்: ரவிக்குமார் எம்.பி. விமர்சனம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா விவகாரம்: ரவிக்குமார் எம்.பி. விமர்சனம்

JustinDurai
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பாரதிய ஜனதா அரசு தோல்வி அடைந்துவிட்டதாக உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஸ்டேன் சுவாமி உயிரிழப்புக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ரவிக்குமார் எம்.பி. '' சிறையிலிருந்த சமூக செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உடல்நலக் குறைவாக இருந்ததால், மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் பிணையில் விடுங்கள் என்று கூறிய போதெல்லாம் விடாமல், நோய்த்தொற்று அதிகமான பிறகு அவரை பிணையில் விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிணை கேட்ட நேரத்தில் அவருக்கு பிணை அளித்திருந்தால் அவருக்கு நல்ல மருத்துவம் கொடுத்து அவரை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் மத்திய பாஜக அரசு திட்டமிட்டு அவருக்கு பிணை வழங்குவதில் தாமதப்படுத்தியது. மேலும் சிறையிலிருக்கும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக உலக நாடுகள் விமர்சித்து இருந்தன. அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு நாடும் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கல்வி அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை எல்லாம் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது'' என்று கூறினார்.