ரேசன் கடைகள் மூலம் சாதாரண குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு வழங்கப்படும் சர்க்கைரையின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி அந்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை அல்லாத மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை விலை கிலோவிற்கு 25 ரூபாயாக இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வரும் குடும்ப அட்டைகளுக்கு சர்க்கரை தொடர்ந்து கிலோ 13 ரூபாய் 50 காசுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையுயர்வு வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வுக்கு பிறகும் ரேசனில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை சந்தை விலையை விட கிலோவிற்கு 20 ரூபாய் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.