அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நியாய விலைக் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமவேலைக்கு சம ஊதியம், மின்னனு குடும்ப அட்டைகளில் குறைகளை நீக்க வேண்டும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவையான ஆயிரத்து 116 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாயவிலைக்கடை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளர் பழனிசாமி மற்றும் கூடுதல் பதிவாளர் பதிவாளர் ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.