தமிழ்நாடு

தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பு

jagadeesh

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் இன்று முதல் ரேஷன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

பால், மருந்து உள்ளிட்ட மிக முக்கியமான கடைகள் மட்டுமே ஊரடங்கு காலத்தில் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மக்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, இன்று முதல் வழக்கம்போல் ரேஷன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன் படி இன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் முதல் தவணை கொரோனா நிவாரண நிதியைப் பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் காலை முதலே ரேசன் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல ஆம்பூரில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு வரிசையில் காத்திருந்த மக்களுக்கு அறிவுறுத்தினர்.