தமிழ்நாட்டில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக இன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.