திண்டுக்கலில் ரேசன் கார்டில் உள்தாள் வழங்குவதற்கு லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பழனியில் ரேசன் கார்டில் உள்தாள் வழங்குவதற்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ரேசன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், மற்றும் உள்தாள் ஒட்டுவதற்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர் குமார் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குமார் பொதுமக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தனது பணியை செய்வதற்கு லஞ்சம் வாங்கும் பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.