தமிழ்நாடு

ரத யாத்திரைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம்

ரத யாத்திரைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம்

webteam

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, வேலூர், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் ராமர் ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றனர். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்று முழக்கமிட்டனர். கோவையில் நடைபெற்ற ஆர்ப்பா‌த்திலும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.