கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில், எலி கேக்குகளை சாப்பிடும் வீடியோ வெளியாகி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் அந்த பேக்கரியில் எலி ஒன்று கேக்கை கொறித்துத் தின்னும் வீடியோ வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதில் பயணிக்கும் பயணிகள் பேருந்து
நிறுத்தும் சிறிய இடைவெளியில் தங்கள் குழந்தைகளுக்கு கேக் மற்றும் திண்பண்டங்கள் வாங்கி தருவது வழக்கம். அப்படி கொடுக்கப்படுவது எந்த நிலையில் உள்ளது
என்றும் பார்ப்பதர்க்கு நேரம் இருக்காது, காரணம் நாம் வந்த பேருந்து சென்று விடுமோ என விரைந்து வாங்கிக் கொண்டு பேருந்தில் சென்று குழந்தைகளுக்கு
கொடுக்கின்றனர்.
ஓசூர் பேருந்து நிலையத்தின் 6ம் எண் கொண்ட கடையில் எலி ஒன்று பயமின்றி கேக் சாப்பிடும் வீடியோ வெளியாக பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், இப்படி சுகாதாரமில்லாமல் விற்கப்படும் பொருட்களால் மேலும் நோய்கள் பெருகுமே தவிர
குறையாது. சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை தூங்குகிறதா என சமுக ஆர்வலர்களும், மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.