தமிழ்நாடு

ரூ.50 ஆயிரத்தை கடித்துக் குதறிய எலி: பரிதவிக்கும் விவசாயி

ரூ.50 ஆயிரத்தை கடித்துக் குதறிய எலி: பரிதவிக்கும் விவசாயி

webteam

கோவையில் விவசாயி ஒருவர் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயை எலி கடித்து சேதப்படுத்தியதால், அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். 

கோவை வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் என்பவர், அறுவடைக்கு பின் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்திருந்தார். ஒரு பையில் அவர் வைத்திருந்த அந்தப் பணத்தை எலி ஒன்று கடித்துக்குதறி, சின்னாப்பின்னமாக்கியது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ், அந்தப் பணத்தை மாற்றுவதற்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகியுள்ளார். ஆனால், ரூபாய் நோட்டுகள் தாறுமாறாகக் கிழிந்துள்ளதால், அதை மாற்ற முடியாது என வங்கியில் கூறியுள்ளனர். இதனால், விவசாயி ரங்கராஜ் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.