தமிழ்நாடு

பாம்பன் அருகே கரை ஒதுங்கியது அரியவகை புள்ளிசுறா

பாம்பன் அருகே கரை ஒதுங்கியது அரியவகை புள்ளிசுறா

webteam

பாம்பன் அருகே அரியவகை திமிங்கல புள்ளிசுறா இறந்து கரை ஒதுங்கியது. இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

கரை ஒதுங்கிய திமிங்கல புள்ளிசுறாவை சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களின் உதவியோடு அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட சுறா மன்னார் வளைகுடா கடல்பகுதியில் வாழும் அரியவகை பாலுட்டி வகையை சார்ந்தது. இது ஆழ்கடலில்தான் அதிகமாக வசித்து வரும் என்றும், கப்பல்கள், படகுகள் அல்லது பாறைகளில் மோதி காயமடைந்து கரை ஒதுங்கி இறந்திருக்கலாம் எனவும் இவ்வாறான அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுறா சுமார் 3.500 டன் எடையும், பத்து அடி சுற்றளவும், சுமார் 20 அடி நீளமும் கொண்டது. இது மனிதர்களுக்கு எந்தவகையிலும் தீங்கு விளைவிக்காத வகையைச் சார்ந்தது எனவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார். அந்த சுறா கால்நடை மருத்துவரால் உடல்கூறு செய்து மணலில் புதைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.