தமிழ்நாடு

4 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த கண்மாய்: குளித்து கொண்டாடும் சிறுவர்கள்

4 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த கண்மாய்: குளித்து கொண்டாடும் சிறுவர்கள்

rajakannan

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிறைந்ததால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக, கீழத்தூவல் கிராமத்திலுள்ள கண்மாய் நிறைந்துள்ளது. அதனால் அப்பகுதியிலுள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை கண்மாய் நீரில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். மேலும், கண்மாய் நிறைந்ததையடுத்து இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.