ஒக்கி புயல் உயிர்நீத்த மீனவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் வீரமுழக்கம் எழுப்பி கடலில் மலர் தூவி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஒக்கி புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் உடமைகளையும், உறவுகளையும் இழந்தனர். இந்த நிலையில் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு 4ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் பாம்பன் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலில் இறங்கி வீரமுழக்கம் எழுப்பி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் பாம்பன் பகுதியில் உள்ள மீனவ பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.