தமிழ்நாடு

ராமேஸ்வரம் டூ அயோத்தி: விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ வீரருக்கு வரவேற்பு

kaleelrahman

கொரோனா விழிப்புணர்வுக்காக ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கிலோமீட்டர் நடந்தே செல்லும் ராணுவ வீரருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ராணுவ வீரரான இவர், கொரோனா பெருந்தொற்று அதிகரித்த காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள், முதலமைச்சர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ராணுவத்தினர், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 197 நாட்டு தேசிய கொடியுடன் பாம்பனில் இருந்து அயோத்தி நோக்கி நடந்தே செல்கிறார்.

இந்நிலையில், அணையா விளக்குடன் 2800 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ வீரரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, ரோமன் சர்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து முகக் கவசம் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.