தமிழ்நாடு

மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் துறைமுகம்

மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் துறைமுகம்

webteam

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

இலங்கையில் தாக்கல் செய்யப்‌பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்ட‌த்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு‌க் கூடுதலாக நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் 950க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும், ‌75 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.