ராமேஸ்வரத்தில் யாசகம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியை அடித்துக் கொலை செய்ததாக மற்றொரு யாசகரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலை சுற்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த தம்பதியினருக்கும் மற்றொரு யாசகம் எடுக்கும் நபருக்கும் இடையே யாசகம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த தம்பதிகள் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமேஸ்வரம் போலீசார், உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உயிரிழந்த தம்பதிகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், ராமு என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவர்களை அடித்துக் கொலை செய்த யாசகர் யார் என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.