பாம்பன் பாலத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதை கவனிக்காமல் வந்ததால், சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூரிலிருந்து 40 சுற்றுலாப் பயணிகளுடன் ராமேஸ்வரம் நோக்கி ஒரு பேருந்து இன்று காலை வந்தது. அப்போது பாம்பன் சாலைப் பாலத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதை பேருந்து ஓட்டுநர் கவனிக்கத் தவறினார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் ராஜீவ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாம்பன் சாலைப் பாலம் ரப்பரால் அமைக்கப்பட்டிருப்பதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.