தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்

Rasus

எல்லை தாண்டி மீன் பிடித்தால், 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குகின்றனர்.

எல்லை தாண்டி வரும் படகுகளுக்கு 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் வசூலிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதா இலங்கை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் மீன்பிடித்தொழிலையே கைவிட வேண்டிய சூழல் உருவாகும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர். சட்டம் நிறைவேறுவதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காலவரம்பற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதுடன், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.