தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

webteam

ராமேஸ்வரம் பண்டபம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடனும் சூறைக்காற்று வீசுவதாலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று அதிகாலையில் இருந்து, அங்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிவருகிறது. அதனால் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.‌ 
இதனால் இன்று ஒருநாள் மட்டும் சுமார் மூன்று கோடி ரூபாய் மட்டுமே வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் தங்களது படகுகளை பாதுகாக்க போதிய துறைமுகம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு ஏற்படுத்தித் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.