குற்றவாளிகள்
குற்றவாளிகள் PT
தமிழ்நாடு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே: குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தனரா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Jayashree A

பெங்களூரில் கடந்த மார்ச் 1ம் தேதியன்று பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடித்தது. இதில் பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளின் மையப்படத்தை கொண்டு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இருவரை பற்றிய விவரங்களை NIA தெரிவித்துள்ளது.

அதன்படி குற்றவாளிகளாக கருதப்படும் இருவரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு பிறகு, குற்றவாளிகள் கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு தப்பியுள்ளனர். பின் அங்கிருந்து மீண்டும் தமிழகம் வந்துள்ளனர். பின்னர் சென்னையிலிருந்து ஆந்திரா, நெல்லூர் சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள் சென்னை சிட்டி சென்டருக்கு சென்றதாக NIA-வுக்கு தகவல் கிடைத்த நிலையில் அதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் குண்டுவெடிப்பின் போது அவர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.