தமிழ்நாடு

ராமநாதபுரம்: சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல இரண்டு நாட்கள் தடை

ராமநாதபுரம்: சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல இரண்டு நாட்கள் தடை

kaleelrahman

தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இரண்டு நாட்களுக்கு தடை, வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ராமேஸ்வரத்திற்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் தனுஷ்கோடிக்கு செல்ல முயன்றனர்.

அப்போது புதுரோடு அருகே போலீசார் சோதனை சாவடி அமைத்து தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் நாளை ஆவணி அமாவாசை தினம் என்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.